கண்ட நாள் முதல் படத்தின் 2-ம் பாகம் - நடிகர் பிரசன்னா ட்வீட்

பிரியா இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘கண்ட நாள் முதல்’.

news18
Updated: February 13, 2019, 4:40 PM IST
கண்ட நாள் முதல் படத்தின் 2-ம் பாகம் - நடிகர் பிரசன்னா ட்வீட்
நடிகர் பிரசன்னா மற்றும் கண்ட நாள் முதல் படக்குழு
news18
Updated: February 13, 2019, 4:40 PM IST
படக்குழுவினருடன் கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து விவாதித்ததாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

பிரியா இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘கண்ட நாள் முதல்’. முக்கோண காதல் கதையில் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளுடன் வெளியான இந்தப் படத்தில் நடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் பிரசன்னா, லைலா, இயக்குநர் பிரியா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரசன்னா.

அந்த பதிவில், நாங்கள் சந்தித்தோம். நன்கு சிரித்துக் கொண்டோம். இத்தனை வருடங்களாக கண்ட நாள் முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிக் கொண்டோம். கண்டிப்பாக இதன் அடுத்த பாகம் குறித்தும் விவாதித்தோம். எவ்வளவு நன்றாக இருக்கும் அது” என்று பிரசன்னா கூறியுள்ளார்.இதனால் விரைவில் கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIDEO: ஓவியாவின் 90 எம்.எல் படத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு - வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...