ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரத்ததானம் செய்தால் வாரிசு டிக்கெட் இலவசம்.. காஞ்சிபுரம் விஜய் ரசிகர்களின் அசத்தல் அறிவிப்பு!

ரத்ததானம் செய்தால் வாரிசு டிக்கெட் இலவசம்.. காஞ்சிபுரம் விஜய் ரசிகர்களின் அசத்தல் அறிவிப்பு!

வாரிசு

வாரிசு

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Kanchipuram

ரத்ததானம் செய்தால் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வாரிசு படத்தின் டிக்கெட் இலவசம் என்று காஞ்சிபுரம் விஜய் ரசிகர்களின் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு படக்குழுவினர் மட்டுமின்றி விஜயின் ரசிகர்களும் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் பேனர் வைப்பது போஸ்டர் ஒட்டுவது என சுவாரஸ்யமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்தால் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வாரிசு படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

`வாரிசு’, `துணிவு’ என இரண்டு திரைப்படங்கள் நாளை (11-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் திரையரங்குகள் வாயிலாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
 
View this post on Instagram

 

A post shared by TVMI Kancheepuram (@tvmikancheepuram)பல இடங்களில் டிக்கெட்டுகளின் விலை அதிக அளவில் விற்கப்படுவதாகவும் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் விஜய் ரசிகர்களின் சார்பில் இரத்ததானம் முகாம் நடைபெறுகின்றது. இதில் இரத்த தானம் வழங்கும் அனைவருக்கும் பாபு திரையரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே வைரலாகி வருகின்றது.

Also read... 2026-ல் நீங்கள் நாற்காலியில் அமர்ந்தால்.. விஜய்க்கு அரசியல் பேனர்.. கவனம் ஈர்க்கும் வாரிசு ரசிகர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Varisu, Vijay fans