Nikki Tamboli: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சனா 3 நடிகை நிக்கி தம்போலி

Nikki Tamboli: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சனா 3 நடிகை நிக்கி தம்போலி

நிக்கி தம்போலி

"கடந்த சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். "

  • Share this:
இந்தியாவில் COVID-19 தொற்று எண்ணிக்கை மெதுவாக அதிகரித்துள்ள நிலையில், திரையுலகில் நடிகை நிக்கி தம்போலி, இத்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

லாரன்ஸ் ராகவேந்திராவின் காஞ்சனா 3 படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்த சிக்கி சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். காஞ்சனா 3 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அவர், லாரன்ஸ் ராகவேந்திரா, வேதிகா மற்றும் ஓவியா ஆகியோருடன் திரையைப் பகிர்ந்து கொண்டார்.

நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் – லைக்ஸை குவிக்கும் டிடி-யின் வீடியோ!



 




View this post on Instagram





 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)






இப்போது நிக்கி தம்போலி கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷயத்தை தனது சமூக வலைதளம் மூலம் பகிர்ந்துக் கொண்டார். "நான் இன்று அதிகாலை கோவிட் பாசிட்டிவ் என சோதிக்கப்பட்டேன். தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், எப்போதும் முகமூடியை அணியுங்கள், உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதுடன், சமூக இடைவெளியை பராமரிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார் நிக்கி.

நடிகை தனது பெற்றோருடன் வசிப்பதால் படப்பிடிப்பிலிருந்து திரும்பிய உடனேயே ஸ்வாப் டெஸ்டுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேர்மறை ரிசல்ட் வந்ததையடுத்து தற்போது, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: