Home /News /entertainment /

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் கார்த்தி பாடிய பாடல் ரிலீஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் கார்த்தி பாடிய பாடல் ரிலீஸ்!

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

கணம் திரைப்படத்திற்காக நடிகர் கார்த்தி பாடிய பாடல் வெளியானது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கணம் திரைப்படத்திற்காக நடிகர் கார்த்தி பாடியுள்ள மாறிப்பேச்சே பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

நடிகர் கார்த்தியின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு கணம் என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.  அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சர்வானந்த்   நடித்திருக்கிறார்.  அதேபோல 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா இந்த திரைப்படம் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.

மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

இந்த திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடி கொடுத்துள்ளார்.  அத்துடன் அந்தப் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவிலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  கார்த்தி தன்னுடைய திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும். இந்த திரைப்படத்திற்கான பாடலை அவர் பாடி கொடுத்து, நடித்துக் கொடுத்துள்ளார்.



மாறிப்போச்சு என தொடங்கும் அந்தப் பாடல் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அவரே அந்த பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கணம் திரைப்படம் தாய் பாசத்தை மையமாகக் கொண்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வரும் 9-ம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Karthi, Amla, Kollywood

அடுத்த செய்தி