• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி படம்...!

ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி படம்...!

நிவின் பாலி

நிவின் பாலி

இந்தப் படத்தில் நிவின் பாலியுடன் வினய் போர்ட், வின்சி அலோசியஸ், ஜாஃபர் இடுக்கி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக திரைப்பட வர்த்தகம் தலைகீழாகியிருக்கிறது. அதிலும் மலையாள திரையுலம் ஓடிடியின் சொந்த தேசமாக மாறியுள்ளது. மோகன்லால், பகத் பாசில், பிருத்விராஜ், ஜெய்சூர்யா படங்களைத் தொடர்ந்து நிவின் பாலி நடித்துள்ள படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

மோகன்லால் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 திரைப்படம் இந்த வருட ஆரம்பத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அதனைத் தொடர்ந்து பகத் பாசிலின் இருள், ஜோஜி, மாலிக் படங்கள் நேரடியாக திரையரங்கில் வெளியாயின. பிருத்விராஜின் கோல்ட் கேஸ், குருதி, ப்ரம்மம் படங்கள் நேரடி ஓடிடி வெளியிட்டை பெற்றன.

ஜெயசூர்யா நடித்த சன்னி திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. டொவினோ தாமஸ் நடித்துள்ள, மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி, மோகன்லாலின் டுவெல்த் மேன் ஆகியவையும் ஓடிடியில் வெளியாக உள்ளன.

இந்நிலையில், நிவின் பாலி நடித்துள்ள கனகம் காமினி கலகம் திரைப்படம் விரைவில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நிவின் பாலியுடன் வினய் போர்ட், வின்சி அலோசியஸ், ஜாஃபர் இடுக்கி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Also read... பக்திப் பாடலாக மாறிய இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்!

ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவாள் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தை இயக்கியவர். இந்தப் படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ளார்.

கனகம் காமினி கலகம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென படம் ஓடிடி வெளியீடு என்று அறிவித்திருப்பது பலருக்கும் ஏமாற்றமளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: