Kana Kaanum Kaalangal: 15 வருடம் கழித்து ஒன்று கூடிய ’கனா காணும் காலங்கள்’ நடிகர்கள்!

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த இர்ஃபான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, பிரியா அட்லீ, மோனிஷா, பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் திரையுலகில் நுழைய, இந்தத் தொடர் முதல் படியாக இருந்தது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகர்கள் 15 வருடம் கழித்து மீண்டும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

    90’ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் ‘கனா காணும் காலங்கள்’ தொடரும் ஒன்று. 2006-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய இத்தொடர், அப்போது பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து இயக்கப்பட்டிருந்தது. இந்தத் தொடருக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்த முகப்புப் பாடலும் ஹிட்டானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் நடித்த இர்ஃபான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, பிரியா அட்லீ, மோனிஷா, பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் திரையுலகில் நுழைய இந்தத் தொடர் முதல் படியாக இருந்தது. இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் 'கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை', 'கனா காணும் காலங்கள் கல்லூரிச் சாலை' என இரண்டு தொடர்கள் இதன் தொடர்ச்சியாக வெளியாகின.



    இந்நிலையில் 15 வருடம் கழித்து, கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர்கள் ஒன்று கூடி, தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இதன் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: