ரஜினியும் நானும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் - கமல்ஹாசன்

ரஜினியும் நானும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம் - கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: November 8, 2019, 12:07 PM IST
  • Share this:
ராஜ்கமலின் 50வது படம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். 

கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிடோர் பங்கேற்றனர். இதே கட்டடத்தில் மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களின் சிலையும் வைக்கப்பட்டது. இந்த சிலையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்

இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன், நடனக்கலையை போன்று ரஜினியின் பாணி வேறு எனது பாணி வேறு. ரஜினி இதுவரை எத்தனை வெற்றிப் படம் கொடுத்தாரோ அதில் எனக்கும் பங்கு உண்டு. சினிமா துறையில் எத்தனை கோபம் வந்தாலும் யார் எதை சொன்னாலும் நாங்கள் பிரியவில்லை. மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ரஜினியும் நானும் ரகசிய ஒப்பந்தம் கெய்து கொண்டோம். எங்களையே நாங்கள் பாராட்டிக்கொள்வோம், ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வோம். எங்களின் வாழ்க்கை மிகவும் எதார்த்தமானது. படங்களின் வெற்றி தோல்வி குறித்து பேசிக்கொள்வோம். சண்டைபோடும் எங்களது ரசிகர்கள் நாங்கள் என்ன பேசிக்கொள்கிறோம் என தெரிந்தால் வியப்பார்கள் என்று பேசியுள்ளார்.


மேலும் ரஜினிக்கு 43 ஆண்டுகள் தாமதமாக விருது அறிவித்திருக்கிறார்கள். தாமதமாக கவுரவித்தாலும், தக்க மனிதரை தான் கவுரவிக்கிறார்கள். 44 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிக்கு ICON விருது வழங்குகிறார்கள். முதல் ஆண்டிலேயே ரஜினி icon தான் என்று கூறியுள்ளார்

இதையடுத்து பேசிய அவர் ராஜ்கமலின் 50வது படம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் பிரமாண்டமாக இருக்கும்  என்றும் கூறியுள்ளார்

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்