Home /News /entertainment /

ரஜினியின் அண்ணாத்த ட்ரெய்லர் சாதனையை முறியடித்த கமலின் விக்ரம் ட்ரெய்லர்…

ரஜினியின் அண்ணாத்த ட்ரெய்லர் சாதனையை முறியடித்த கமலின் விக்ரம் ட்ரெய்லர்…

அண்ணாத்த ரஜினி - விக்ரம் கமல்

அண்ணாத்த ரஜினி - விக்ரம் கமல்

ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் 55 மில்லியன் பார்வைகளையும், 30 லட்சம் விருப்பங்களையும் கடந்திருக்கிறது.

ரஜினியின் அண்ணாத்த ட்ரெய்லர் நிகழ்த்திய சாதனையை கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் 2 நாட்களில் முறிடித்துள்ளது. இதனால் கமலின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி திரைக்கு வந்தது. ரஜினியுடன் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்தனர்.

கிராமத்து குடும்ப கதையில், அண்ணன் – தங்கை சென்டிமென்டுடன் சிவா இந்த படத்தை உருவாக்கியிருப்பார். இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. எதிர்பார்ப்பு மிக்க இந்தப் படத்தின் ட்ரெய்லர், கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம்தேதி வெளியானது.

இதையும் படிங்க - அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு

தற்போது வரை அண்ணாத்த ட்ரெய்லர், 17 மில்லியன் பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 6.15 லட்சம்பேர் இதனை லைக் செய்துள்ளார்கள்.



அதே நேரம் நேற்று முன்தினம் வெளியான விக்ரம் படத்தின் ட்ரெய்லர், 2 நாட்களில் மட்டும் 17.5 மில்லியன்களை கடந்து, 10 லட்சம் விருப்பங்களை தாண்டியுள்ளது.



படம் வெளியாக இன்னும் 2 வாரத்திற்கும் மேல் நாட்கள் உள்ளதால், இன்னும் பல பார்வைகளையும் விருப்பங்களையும் விக்ரம் ட்ரெய்லர் அள்ளிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இசையில் மாய நதியை ஓட செய்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்… சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு…

இவ்விரு ட்ரெய்லர்களையும் ஒரு ஒப்பீடாக பார்க்கும்போது விக்ரம் படம் மெகாஹிட் ஆகும் என்பதை உறுதியாக சொல்லலாம்.



ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் 55 மில்லியன் பார்வைகளையும், 30 லட்சம் விருப்பங்களையும் கடந்திருக்கிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Rajinikanth

அடுத்த செய்தி