காமசூத்ரா பட நடிகை மாரடைப்பால் மரணம்

இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சாயிராவை இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்ய சவாலாக இருந்தது. ஒருசில மாதங்கள் தொடர் முயற்சிக்குப் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

news18
Updated: April 21, 2019, 7:32 PM IST
காமசூத்ரா பட நடிகை மாரடைப்பால் மரணம்
நடிகை சாய்ராகான்
news18
Updated: April 21, 2019, 7:32 PM IST
3-டியில் உருவான காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை சாயிரா கான் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு காமசூத்ரா படம் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு பதிலாக நடிகை சாயிரா கான் நடித்திருந்தார். ரூபேஷ் பவுல் இந்தப் படத்தை இயக்கினார்.

சாயிரா கான் மரணம் குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள படத்தின் இயக்குநர் ரூபேஷ் பவுல், மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தச் செய்தியை யாரும் வெளியிடாதது வருத்தமளித்தது. திறமையான நடிகையாக இருந்தும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சாயிராவை இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்ய சவாலாக இருந்தது. ஒருசில மாதங்கள் தொடர் முயற்சிக்குப் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார்க்கு நன்றி சொன்ன சன்னி லியோன்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...