• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?

சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?

கமல் மற்றும் சூரியா

கமல் மற்றும் சூரியா

விக்ரமில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் காரணமாக கமலின் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் படம் இது. அத்துடன் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் கலந்து கொள்ள வந்த ராதிகாவும், எதற்கும் துணிந்தவனில் நடித்து வந்த சூர்யாவும் ஒரே இடத்தில்தான் தங்கியிருந்தனர். காலைவேளையில் இருவரும் ஒன்றாக காபி அருந்திய புகைப்படத்தை ராதிகா வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்

ஏற்கனவே காரைக்குடி படப்பிடிப்பு ஆள்களால் நிரம்பியிருக்கிறது. விக்ரம் படக்குழு வந்தால், அவர்கள் தங்குவதற்கான இடங்கள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு கிடைப்பது அரிது. ஒரே நேரத்தில் பல படங்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதும் சந்தேகம். இதன் காரணமாக கமல் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 20 ஆம் தேதி விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்குமா என்பது கேள்விக்குறியே என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.



Also read... இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பரை நேரில் சென்று பாராட்டிய மம்முட்டி!

விக்ரமில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ஆன்ட்ரியா நடிக்கலாம். இவர்களின் கால்ஷீட் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். அதனால், திட்டமிட்டபடி ஆக்ஸ்ட் 20 படப்பிடிப்பை தொடங்கியே ஆக வேண்டிய சூழலில் விக்ரம் படக்குழு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: