ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கமலின் அன்பே சிவம் போஸ்டர்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கமலின் அன்பே சிவம் போஸ்டர்

கமல், ப்ரியதர்ஷன், மாதவன், இசையமைப்பாளர் வித்யாசாகர்

கமல், ப்ரியதர்ஷன், மாதவன், இசையமைப்பாளர் வித்யாசாகர்

அன்பே சிவம் படத்திற்கு முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ப்ரியதர்ஷன். கமலின் தேவர் மகன் படத்தை ப்ரியதாஷ்ன் இந்தியில் அனில் கபூரை வைத்து விராசட் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். படம் அங்கும் வெற்றி பெற்றிருந்தது. அதனால், 2002 இல் அன்பே சிவம் படத்தை தொடங்கிய போது ப்ரியதர்ஷனை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் கமல்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல் முதல்முறை நாயகனாக நடித்தது மலையாளப் படத்தில். அப்போது தமிழைவிட மலையாள சினிமாவே கமலை அதிகம் பயன்படுத்தியது. தமிழில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்தப் பிறகு தனக்குப் பிடித்தமான மலையாள இயக்குனர்களை வைத்து தமிழில் படம் செய்ய விரும்பினார் கமல்.

பரதன், சிபிமலையில், ப்ரியதாஷ்ன் போன்றவர்கள் அவர்களில் சிலர். பரதன் இயக்கத்தில் கமல் நடிக்கும் தமிழ்ப் படம் இதோ அதோ என பல வருடங்கள் இழுத்தடித்தது. பல கதைகள் மாறி, கடைசியில் தேவர் மகன் படத்தை பரதன் இயக்கினார்.

அதேபோல் சிபிமலையில் இயக்கத்தில் பல முயற்சிகள். ஆனால், இன்றுவரை அது நடக்கவில்லை. 1993 இல் பாலச்சந்திர மேனன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான அம்மையாண சத்தியம் படம் கமலுக்குப் பிடித்து அதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார்.

அதில் நாயகி ஆனி, தனது அடையாளத்தை மறைத்து ஆண் போல் வேடமிட்டு நாயகன் முகேஷுடன் தங்கியிருப்பார். அந்தப் படத்தை தமிழில் கண்டேன் சீதையை என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்வதாக அறிவித்தார்கள். கமலுக்கும், பாலச்சந்திர மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படம் டேக்ஆஃப் ஆகவில்லை. இதன் தொடர்ச்சிதான் கமலை அவ்வை சண்முகி படத்தை எடுக்க வைத்தது.

அன்பே சிவம் படத்திற்கு முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ப்ரியதர்ஷன். கமலின் தேவர் மகன் படத்தை ப்ரியதாஷ்ன் இந்தியில் அனில் கபூரை வைத்து விராசட் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். படம் அங்கும் வெற்றி பெற்றிருந்தது. அதனால், 2002 இல் அன்பே சிவம் படத்தை தொடங்கிய போது ப்ரியதர்ஷனை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் கமல்.

கமல், ப்ரியதர்ஷன், மாதவன், இசையமைப்பாளர் வித்யாசாகர் இடம்பெற்ற போஸ்டரும் வெளியிட்டனர். அதன் பிறகு என்ன காரணத்தினாலோ ப்ரியதர்ஷன் விலக, சுந்தர் சி. உள்ளே வந்தார். ப்ரியதர்ஷன் கமலை இயக்குவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை.

Also read... எஸ்.ஜே.சூர்யாவின் அ.. ஆ.. தெரியும், சிவாஜியின் அ.. ஆ.. தெரியுமா?

இதேபோல் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க பலமுறை முன்றார் கமல். பல அறிவிப்புகளும் வந்தன. இந்த ராஜீவ் குமார்தான் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவர். அதன் பிறகு பல பத்து வருடங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்ய முயன்றனர். இறுதியில் சபாஷ் நாயுடு படத்தை ராஜீவ் குமார் இயக்குவதாக முடிவாகி, வெளிநாட்டில் படப்பிடிப்பும் தொடங்கியது. பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என இயக்குனர் பொறுப்பை கமலே எடுத்துக் கொண்டார். சில நாள்கள் படப்பிடிப்புடன் சபாஷ் நாயுடு கைவிடப்பட்டது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் மலையாள இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. தேவர் மகன் போன்ற ஒரு படம் மலையாள இயக்குனருடனான கூட்டணியில் கிடைத்தால் அமர்க்களமாகத்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal Haasan