என் அன்புத் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் -கமல்

பிகில் பட ஃபர்ஸ்ட்லுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், "ஒரே வார்த்தையில் வெறித்தனம்” என்று கூறியிருக்கிறார். 

என் அன்புத் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் -கமல்
கமல் - விஜய்
  • News18
  • Last Updated: June 22, 2019, 4:33 PM IST
  • Share this:
விஜய் பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் விஜய் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 63-வது படமான பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். அவர் தனது தனது பதிவில், “என் அன்புத் தம்பி நடிகர் விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.


கமல்ஹாசன், விஜய்




பிகில் பட ஃபர்ஸ்ட்லுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், "ஒரே வார்த்தையில் வெறித்தனம்” என்று கூறியிருக்கிறார்.  தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.



நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், “நான் பணியாற்றியதிலேயே மிகவும் எளிமையான நடிகர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மேலும் பிகில் படத்துக்கும் தனது வாழ்த்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.



வீடியோ பார்க்க: விஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்!

First published: June 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading