நீங்க விளையாடினது என்கிட்ட இல்ல எமன்கிட்ட - கடாரம் கொண்டான் ட்ரெய்லர்

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான்

news18
Updated: July 3, 2019, 7:55 PM IST
நீங்க விளையாடினது என்கிட்ட இல்ல எமன்கிட்ட - கடாரம் கொண்டான் ட்ரெய்லர்
கடாரம் கொண்டான்
news18
Updated: July 3, 2019, 7:55 PM IST
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் கமல்ஹாசன்.

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் ஜுலை 19-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது . தற்போது படத்தின் ட்ரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் சண்டைக் காட்சிகளுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...