சிவாஜி படத்தில் வரும் ஒரு கூடை சன் லைட் பாடலில் ரஜினி வெள்ளைக்காரரைப் போல் தோன்றுவார். கறுப்பாக இருக்கும் அவர், ஸ்ரேயாவை திருமணம் செய்ய வெள்ளையாக மாற முயற்சி செய்வார். அதன் தொடர்ச்சியாக ரஜினியை வெள்ளைக்காரராக மாற்றி அந்தப் பாடலில் நடனமாட விட்டிருப்பார் ஷங்கர். படம் வெளிவருவதற்கு முன்பே இந்த செய்தி வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க.. ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!
ஆனால், சிவாஜி படத்துக்கு முன்பு, கமலுக்கு வெள்ளை நிறத்தில் மேக்கப் போட்டு போட்டோஷுட் நடத்தினார் ஷங்கர். கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், உண்மை.
இந்தியன் படத்தின் போது கமலை வைத்து விதவிதமாக போட்டோஷுட் நடத்தினர். அப்போது கதை முழுமை பெறவில்லை. அதுவரை யோசித்திருந்த கதையை வைத்து போட்டோஷுட் நடத்தப்பட்டது. அதில் ஒன்றில் கமலுக்கு முழுக்க வெள்ளைநிற மேக்கப் போட்டு படங்கள் எடுத்தனர். இந்தியன் கதைப்படி சேனாதிபதி மகனை கொன்றுவிட்டு வெளிநாடு செல்வார். அதற்காக இப்படியொரு மேக்கப்பை முயற்சி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், உண்மையில் எதற்காக கமலுக்கு வெள்ளை மேக்கப் போடப்பட்டது என தெரியவில்லை.
இந்தியன் படத்தின் கதையை ஷங்கர் சொன்ன போது அதில் நிறைய மாற்றங்கள் கமல் சொல்லியுள்ளார். அதன்படி கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ஷங்கரும் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார். முறுக்கிய மீசையுடன் வரும் சேனாதிபதியாகதான் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை யோசித்திருக்கிறார்கள். அதன்படி கமலை வைத்து - வயதான மேக்கப் இல்லாமல் - புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.
கடைசியில் வயதான மேக்கப் போட்ட போது மீசை வைக்கவில்லை. மீசை இல்லாமலே போட்டோஷுட் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், கமல் உஷாராக கையில் ஒட்டு மீசையை வைத்திருந்திருக்கிறார். ஆனால், மீசையில்லாமலே நன்றாகத்தான் இருக்கு. அப்படியே இருக்கட்டும் என்று விட்டிருக்கிறார்கள். பிறகு கதையில், சேனாதிபதி தனது மீசை குத்தி மகன் அழுததால் மீசையை எடுத்துவிடுவதாக காட்சியை சேர்த்து சென்டிமெண்ட் சைடில் மைலேஜ் சேர்த்திருக்கிறார் ஷங்கர். இந்தியனில் வயதான கமல் படம் முழுக்க மீசையிலல்லாமல் வருவார்.
எம்ஜிஆருடன் இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா?
தனது மகனே ஒரு விஷச் செடி என அறிந்து அவனை கொலை செய்த பின், வெளிநாட்டிலிருந்து பேசும் கடைசிக் காட்சியில் மட்டும் மீசை வைத்திருப்பார். அதாவது, மகனுக்கு குத்தும் என அவனது குழந்தைப் பருவத்தில் எடுத்த மீசையை அவன் இறந்தப் பிறகு மறுபடியும் வளர்த்திருப்பார்.
இந்தியன் படத்துக்காக கமலை வைத்து நவநாக ரி க உடையில் நிறைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மகன் கதாபாத்திரத்துக்காக இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில் கமல் மீசையுடன் இருப்பார். இந்தியன் பேச்சு நடந்து கொண்டிருக்கையில்தான் அவர் மீசையில்லாமல் குருதிப்புனலில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியனிலும் மகன் கதாபாத்திரத்தில் மீசையில்லாமல் நடித்தார்.
இந்தியனுக்காக கமலுக்கு போட்டது வெள்ளை மேக்கப். ஆனால், சிவாஜியில் ரஜினியின் வெள்ளை நிறத்தை சிஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கினார்கள். அதனால்தான் சிவாஜி ரஜினியின் வெள்ளைநிற தோற்றம் அழகாகவும், கமலின் வெள்ளை மேக்கப் முகமூடி போட்டது போன்றும் தோன்றுகிறது.
கமலுக்குப் போட்ட மேக்கப் பயன்படாமல் போனாலும், அந்த அனுபவம் சிவாஜியில் வித்தியாசமான வெள்ளைக்கார தோற்றத்தில் ரஜினியை காட்ட ஷங்கருக்கு உதவியிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director Shankar, Kamal Haasan, Kollywood, Rajinikanth, Tamil Cinema