இணையத்தில் கசிந்த ’இந்தியன் 2’ படக்கதை?

இணையத்தில் கசிந்த ’இந்தியன் 2’ படக்கதை?
இந்தியன் 2
  • News18
  • Last Updated: August 26, 2019, 5:57 PM IST
  • Share this:
கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதை கசிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமூக ஆர்வலாரான சித்தார்த் தனது மனைவியுடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வயதான கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார். ஊழல் அரசியல்வாதிகளை தனது பாணியில் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.

சென்னை திரும்பும் கமல்ஹாசன் தனது மனைவியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தார்த்திடம் வாங்குகிறார். பின்னர் வர்ம கலையின் மூலமாக அனைவரையும் அழிக்கிறார். இதற்கு நடிகர் சித்தார்த்தும், வர்மக் கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கின்றனர்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் கமல்ஹாசனைப் பிடிக்க புதிய திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி கமல்ஹாசன் பிடிபட்டாரா? என்பது கிளைமாக்ஸ்.

இந்தக் கதை சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் படக்குழு இதுகுறித்த எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

வீடியோ பார்க்க: காஞ்சிபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்து 2 பேர் மரணம்!

First published: August 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்