கொரோனா பாதிப்பு : பெஃப்சிக்கு கமல்ஹாசன், தனுஷ், ஷங்கர் நிதியுதவி!

கொரோனா பாதிப்பு : பெஃப்சிக்கு கமல்ஹாசன், தனுஷ், ஷங்கர் நிதியுதவி!
கமல்ஹாசன் | ஷங்கர் | தனுஷ்
  • Share this:
பெஃப்சி தொழிலாளர்களுக்கு இன்று நடிகர் கமல்ஹாசன், தனுஷ், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் நிதி உதவி அளித்துள்ளனர்.

கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 25 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெஃப்சியில் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், கமல்ஹாசன் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம், இயக்குநர் பி.வாசு ரூ.1 லட்சம், லோகேஷ் கனகராஜ் ரூ.50 ஆயிரம் என திரைத்துறையைச் சார்ந்த பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.


பணமாக மட்டுமின்றி தயாரிப்பாளர் தாணு 250 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்), இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள் (25 கிலோ வீதம்), நடிகர் சூரி - 8 அரிசி மூட்டைகள், மனோபாலா 10 அரிசி மூட்டைகள் என பொருளாகவும் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியும் 10 மூட்டை (25 கிலோ) அரிசியும் வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க: 5 லிட்டர் சானிடைசருடன் அமைச்சரை சந்தித்த பார்த்திபன்


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading