• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் - கமல்ஹாசன் ட்வீட்..

பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் - கமல்ஹாசன் ட்வீட்..

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் பெரியாரை  வாழ்த்திப் பதிவு செய்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

  • Share this:
    பெரியாரின் பிறந்தநாளையொட்டி, பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்

    புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர் எனத் தனது வாழ்த்துச் செய்தியின் குறிப்பிட்டுள்ளார்.



    ட்விட்டரில் பெரியாரை வாழ்த்திப் பதிவிட்டுள்ள மய்யம் தலைவர் கமல்ஹாசன், “பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    சமூகத்தின் பாலின,சாதீய,வர்க்க பேதம் என சுயமரியாதைக்கு எதிரான அனைத்து பேதங்களையும் தொடர்ந்து எதிர்த்தவர்.பெண் விடுதலைக்கு எதிரான அனைத்து விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி தயக்கம் இல்லாமல் குரல் கொடுத்த முன்னோடி.அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் பெரியாரை  வாழ்த்திப் பதிவு செய்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: