Home /News /entertainment /

டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்ஹாசன்...

டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்ஹாசன்...

டி.ராஜேந்தரை சந்தித்த கமல்ஹாசன்

டி.ராஜேந்தரை சந்தித்த கமல்ஹாசன்

T Rajendar : சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவருக்கும் டி ராஜேந்திரை நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். 

டி.ராஜேந்தர் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பனமுக திறமைக் கொண்டவர்.டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி வசனத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

டி.ராஜேந்தர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,  அதன் பிறகு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நடிகர் சிலம்பரசன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருந்தார்.

அதற்கான சிகிச்சை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நடைபெற்றுவந்தது. சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்த போதும்  அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்தார். இந்நிலையில் டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

also read : அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்திக்கிறார் டி.ஆர்



இன்று மாலை சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர் . இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான நடிகர் கமலஹாசன் டி.ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து இன்று மாலை உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Kamalhaasan

அடுத்த செய்தி