பத்தல பத்தல பாடலை தன்னுடைய குரலில் பாடி வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளி திரு மூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். மேலும் திருமூர்த்தி இசை பயிற்சி பெறுவதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் பாடலை சமீபத்தில் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி திருமூர்த்தி தன்னுடைய குரலில் பாடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது...
இந்தநிலையில் திருமூர்த்தியை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். அத்துடன் சிறந்த இசைக் கலைஞராக உருவாக வேண்டும் என்ற திருமூர்த்தியின் கனவை நிறைவேற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசைப்பள்ளியில் அவர் பயிற்சி பெற உதவி செய்து உள்ளார். அதற்காக ஏ.ஆர் ரகுமானிடமும் பேசியுள்ளார்.
அத்துடன் திருமூர்த்தி இசை பயில்வதற்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் நடிகர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தியின் பல பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
இதையும் படிங்க - விஞ்ஞானி நம்பி நாராயணனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் – நடிகர் மாதவன் பேட்டி
அதைப்பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய இசையில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கியிருந்தார். இந்த நிலையில் சிறந்த இசைக் கலைஞராக உருவாக ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் பயிற்சி பெற உள்ளார் திருமூர்த்தி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.