ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2 பட ஷூட்டிங்... டிசம்பர் 5ஆம்தேதி தொடக்கம்...

சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2 பட ஷூட்டிங்... டிசம்பர் 5ஆம்தேதி தொடக்கம்...

இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

முதல்பாகத்தில் சேனாபதி, சந்த்ரு என்ற 2 கேரக்டரில் கமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன்-2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 5-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ஷங்கர் இந்தியன்-2 மற்றும் ராம்சரண் படங்களுக்கு மாறி மாறி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ராம்சரண் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பிற்காக நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.  அதை முடித்துக் கொண்டு வரும் 3-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

வாத்தியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்…

ஒருநாள் ஓய்வெடுத்தபின் 5-ம் தேதியிலிருந்து இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை தொடங்குகிறார்.  அதற்கான படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் தொடங்குகிறது.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

2001-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்களும், பின்னணி இசையும் படத்தை உயர்த்திப் பிடித்தன.

பாபா படத்திற்கு புதிய இசையை சேர்க்க ஏ.ஆர். ரகுமான் ஆர்வம்… ரஜினி பிறந்த நாளையொட்டி படம் வெளியாகிறது…

முதல்பாகத்தில் சேனாபதி, சந்த்ரு என்ற 2 கேரக்டரில் கமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா கேரக்டர்கள் நிறைவான நடிப்பைத் தந்தன.

இந்தியன் தாத்தா தான் உயிரோடு இருப்பதாக வெளிநாட்டில் இருந்து போன் செய்து தகவல் அளிப்பார். அத்துடன் படம் நிறைவு பெற்றிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

First published:

Tags: Kamal Haasan, Kollywood