ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உருவாகிறது ஹெச்.வினோத், கமல் கூட்டணி... இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

உருவாகிறது ஹெச்.வினோத், கமல் கூட்டணி... இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

ஹெச்.வினோத், கமல்ஹாசன்

ஹெச்.வினோத், கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் புதிய திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார் என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத் இயக்கம் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. 

எச்.வினோத் தற்போது அஜித் நடிப்பில் துணிவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் புதிய திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார் என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது. அந்த செய்தியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜ் கமல் நிறுவனம் அறிவிக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர். அந்த திரைப்படத்தை கமல்ஹாசனுடைய ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் எச்.வினோத் படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளார்.

இதையும் வாசிக்க: த்ரிஷாவுக்கு என்னாச்சு... அவர் பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்..! (news18.com)

நடிகர் கமல் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து ஹெச்.வினோத்தை தேர்வு செய்திருக்கிறார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Kamalhaasan, Vinoth