• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vikram First Glance : கெத்தா என்ட்ரி கொடுத்த கமல்.. வெளியானது ‘விக்ரம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் கிளான்ஸ்..

Vikram First Glance : கெத்தா என்ட்ரி கொடுத்த கமல்.. வெளியானது ‘விக்ரம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் கிளான்ஸ்..

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

Vikram Movie First Glance : கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் கிளான்ஸ் வெளியானது.

  • Share this:
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் படம் ’விக்ரம்’.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் ,கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிவுள்ளார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ’மாஸ்டர்’ படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது . அடுத்து யாருடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றுவார் என மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், விக்ரம் படத்தின் அறிவிப்பு வெளியானது.

    இந்த படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசிலும் உள்ளார். பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் நிச்சயமாக கமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் படத்தின் புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டதோடு, விக்ரம் படத்தின் ஃப்ர்ஸ்ட் கிளான்ஸ் வெளியாகும் என அறிவிந்திருந்தார்.


    இந்நிலையில்  ‘விக்ரம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் கிளான்ஸ் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.



    விக்ரம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: