கமல் நடிப்பில் வெளிவரவுள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
அதிரடி, க்ரைம், த்ரில்லர், மாஸ் படங்களுக்கு பெயர் போன லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார். கமலின் தீவிர ரசிகர்கள் என்பதால் லோகேஷ் தான் கற்ற மொத்த வித்தைகளையும், கமலுக்காக விக்ரம் படத்தில் இறக்கியுள்ளார்.
லோகேஷின் அபார உழைப்பையும், மெனக்கெடல்களையும், விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் என மல்டி ஹீரோக்கள் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ளதால் வர்த்தக ரீதியில் இந்தப் படம் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்
இந்நிலையில் நேற்றிரவு 8 மணிக்கு வெளியான விக்ரம் படத்தின் ட்ரெய்லர், வெளியான 16 மணி நேரத்திற்குள்ளாக 1 கோடி பார்வைகளை அதாவது 10 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்த்தும், பகிர்ந்தும் வருவதால், குறுகிய நேரத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க - விக்ரம் ட்ரெய்லரில் மிஸ் ஆனாரா சூர்யா? அப்போ இந்த கேரக்டர் யார்?
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் ட்ரெய்லரில் பல சிறப்பு அம்சங்களை படக்குழுவினர் உள்ளடக்கம் செய்துள்ளனர். கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லன்களாக வரும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ட்ரெய்லர் ஆரம்பித்தது முதல் முடியும் வரை பெரும்பாலான இடங்களில் துப்பாக்கிதான் வெடிக்கிறது. குழந்தை பொம்மை விளையாடுவதைப் போல் துப்பாக்கிகளில் என்னென்ன ரகங்கள் இருக்குமோ அத்தனையையும் எடுத்து கமல் விளையாடுகிறார்.
விக்ரம் ட்ரெய்லரை பார்க்க...
ட்ரெய்லரில் ஒரு காட்சியில் வரும் குழந்தைதான் கமலின் மகன் என்றும், அவர்தான் சூர்யா என்பதாகவும் சமூக வலைதளங்ளில் பரவலாக யூகிக்கப்படுகிறது.
விக்ரம் படத்திலிருந்து கமல் பாடிய பத்தல பத்தல பாடல், ட்ரெய்லர் மற்றும் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது.
ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.