Home /News /entertainment /

சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது 'விக்ரம்' படத்தின் ஆடியோ லான்ச்

சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது 'விக்ரம்' படத்தின் ஆடியோ லான்ச்

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஜூன் 3-ம்தேதி விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து சில கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது. 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்கு பின்னர் கமலுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இடையே இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு முழுமையடையாத நிலையில் விக்ரம் படம் ஜூன் 3-ல் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க - வாலி படத்தின் ரிமேக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி

படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன், ஆன்டனி வர்கிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. தற்போது, படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் விரைவுபடுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்து ரசித்த இசைஞானியும் கலைஞானியும்!

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்சை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாண்டி மாஸடரின் கொரியோகிராஃபில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மாஸ்டர் படத்திற்கு பின்னர் விஜய்யின் பீஸ்டிற்கு ஆடியோ லான்ச் நடைபெறும் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதனை நடத்தாமல் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஏமாற்றம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan, Vikram

அடுத்த செய்தி