ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கமலின் விக்ரம்…

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கமலின் விக்ரம்…

விக்ரம்

விக்ரம்

விக்ரமின் வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சர்வதேச புகழ்பெற்ற தென்கொரியாவின் பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  தமிழ் சினிமா வரலாற்றில் எந்தப் படமும் இந்த அளவுக்கு வசூலைக் குவித்ததில்லை. இந்நிலையில் சர்வதேச புகழ்பெற்ற தென்கொரியாவின் பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக விக்ரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

  உலகநாயகன் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது.

  சிரஞ்சீவியின் காட் ஃபாதருடன் மோதும் நாகார்ஜுனாவின் கோஸ்ட்... டோலிவுட்டில் பரபரப்பு

  அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில், விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.

  கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியானது. உலகம் முழுக்கப் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட யூ.கே எனப்படும் ஐரோப்பியப் பகுதியில் வெளியான இந்தியத் திரைப்படங்களிலேயே விக்ரம்தான் பெருவெற்றி பெற்றது.

  விமர்சனங்களை தாண்டி யூடியூபில் சாதனை படைத்த ஆதிபுருஷ் டீசர்…

  ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி திரு. நாராயணன் கூறுகையில், 'உலகெங்கிலும் விக்ரம் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. பூஸான் சர்வதேசத் திரைப்பட விழா இந்தத் திரைப்படத்தின் கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு வைரக் கல்.

  இந்தத் தேர்வு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படும் பல அற்புதமான திரைப்படங்களுடன் எங்கள் படமும் திரையிடப்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது, ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.

  இவ்வாறு விக்ரம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Vikram