ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு

கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

ஜூன் 3-ம்தேதி ரிலீஸாகிறது கமலின் விக்ரம்.

ஜூன் 3-ம்தேதி விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் திரைப்பட திருவிழா நடத்தப்படுகிறது. 75 ஆண்டுகள் பழமையான இந்த விழா உலகம் முழுவதும் புகழ்பெற்றதாகவும். விழாவின்போது பல்வேறு ஜேனர்களில் இருந்து திரைப்படங்களும், டாக்குமென்டரிகளும் திரையிடப்படும்.

இந்தாண்டு மே மாதம் 17-ம்தேதி கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி மே 28-ம்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில், கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க - சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!

ஜூன் 3-ம்தேதி விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து சில கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்…

படத்தில் விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர். அனிருத் இசையில் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது. 2018-ல் வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்கு பின்னர் கமலுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இடையே இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு முழுமையடையாத நிலையில் விக்ரம் படம் ஜூன் 3-ல் திரைக்கு வருகிறது.

படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன், ஆன்டனி வர்கிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதிதியன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Actor Vijay Sethupathi, Kamal Haasan, Lokesh Kanagaraj