விக்ரம் இந்தி பட புரொமோஷனுக்காக பிரபல நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். ஜூன் 3-ம்தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகியுள்ளது. கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி அல்லது ரா உளவுப் பிரிவு அதிகாரி கெட்டப்பில் கமல் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் விக்ரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க - உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' சென்சார் சான்றிதழ் வெளியீடு...
படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் லான்ச்சை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விக்ரமின் டிஜிட்டல் ரைட்சை முன்னணி ஓடிடி நிறுவனம் ரூ. 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படத்தின் பட்ஜெட்டே ரூ. 100 கோடி என்ற அளவில் இருக்கும்போது, டிஜிட்டல் சேல்ஸ் படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க - எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்
இந்தி மொழியிலும் விக்ரம் படம் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதையொட்டி வட மாநிலங்களில் படத்தை புரொமோஷன் செய்யும் நடவடிக்கையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியில் பிரபல தொகுப்பாளர் கபில் ஷர்மாவின், தி கபில் ஷர்மா ஷோ மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.
ஜூன் 3ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக புரொமோஷன் வேலைகளை சிறப்பாக முடித்திட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.