Home /News /entertainment /

ஓடிடி தளத்தில் இன்று நள்ளிரவில் வெளியாகும் விக்ரம்… படத்தை பார்க்க செய்ய வேண்டியது என்ன?

ஓடிடி தளத்தில் இன்று நள்ளிரவில் வெளியாகும் விக்ரம்… படத்தை பார்க்க செய்ய வேண்டியது என்ன?

விக்ரம்

விக்ரம்

Vikram OTT Release : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், விக்ரம் படத்தை பார்க்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சப்ஸ்கிரிப்ஷன் செய்திருக்க வேண்டும்.

    சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் திரைப்படம், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனைப் பார்க்க செய்ய வேண்டியது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையிலும், பல்வேறு திரையரங்குகளில் இன்றளவும் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இன்றைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் ரூ. 442 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் மிகப் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

    இதையும் படிங்க - பிங் நிற புடவையில் கலக்கும் நடிகை திஷா பதானி - வைரலாகும் போட்டோஸ்! 

    சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து விக்ரம் படத்தை ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விக்ரம் திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், விக்ரம் படத்தை பார்க்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சப்ஸ்கிரிப்ஷன் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மூன்று ப்ளான்களை ஹாட்ஸ்டார் தளம் அளித்துள்ளது.

    ரூ. 499 ப்ளானில், மொபைல் போனில் மட்டும் ஓடிடி தளத்தை காணலாம். ஸ்டாண்டர்டு HD தரத்தில் விக்ரம் உள்பட தளத்தின் மற்ற படங்கள், நாடகங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளை பார்க்கலாம். இந்த பிளானில் விளம்பரங்கள் தோன்றும். ஒரு டிவைசிற்கு மட்டுமே அனுமதி.

    இதையும் படிங்க - அருண் விஜயின் யானை படத்தில் 5 நிமிட காட்சி நீக்கம்? 

    ரூ. 899 ப்ளானில் முழு HD தரத்தில் 2 டிவைஸ்கள் வரை கண்டு மகிழலாம். ரூபாய் 1,499 ப்ளானில் விளம்பரங்கள் இல்லாத 4K தரத்தில் ஓடிடி தள சேவையை பெறலாம். இந்த பிளான்கள் அனைத்தும் ஓராண்டிற்கு உரியவை.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamalhaasan, Vikram

    அடுத்த செய்தி