விக்ரம் படத்தின் வெற்றியையொட்டி கமலுக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு கமல் அளித்துள்ளார். இது இருவரின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விக்ரம் படத்தின் முதல் பாகம் 1986-ல் வெளியானபோது அந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தபடத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகின. குறிப்பாக விக்ரம் தீம் மியூசிக் மிரட்டலாக அமைந்திருந்தது.
அதனை சற்று மாற்றி, லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் அடுத்த பாகத்தில் பயன்படுத்தியிருப்பார். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நடிப்பு அசுரர்கள் இந்த படத்தில் இணைந்திருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு இந்தப் படம் பூர்த்தி செய்தது. இதனால் ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் இன்றளவும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க - ‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்
கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கமலுக்கு கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியால் கமல் அதீத உற்சாகத்துடன் காணப்படுகிறார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பல்வேறு நபர்களை கமல் சந்தித்து பேசி விட்டார்.
இயக்குனர் லோகேஷிற்கு லெக்சஸ் கார், உதவி இயக்குனர்களுக்கு அபாச்சி பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசளித்த கமல், வெற்றி விழாவில் விருந்து வைத்து அசத்தினார்.
இதையும் படிங்க - நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்
கமலின் இந்த உற்சாகத்தை பார்த்த இசைஞானி, ‘கமலின் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இளையராஜா தனது ட்விட்டர் பதிவில், ‘வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்.’ என்று கூறியிருந்தார்.
நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும்
உங்கள் நான். https://t.co/54VwAY3Iul
— Kamal Haasan (@ikamalhaasan) June 21, 2022
இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள கமல், ‘நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்.’ என்று பதில் அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilayaraja, Kamalhaasan