2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் நிலைப்பாடு என்ன?

2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை குறிவைத்து களமிறங்கிய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும், தற்போது தேர்தல் பணிகளுக்கு ஆயத்தமாவதை விடுத்து வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருகின்றனர்.

2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் நிலைப்பாடு என்ன?
இந்தியன் 2 - தர்பார்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 11:03 AM IST
  • Share this:
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நடிகர்களும் அரசியலில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும், 2021 பொதுத் தேர்தலில் களமிறங்கப் போவது உறுதி எனவும் ரசிகர்கள் சந்திப்பில் முழங்கி பரபரப்பை கூட்டினார்.

தற்போது ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 2021 ஆம் ஆண்டு புதுக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு ரஜினிகாந்தின் அரசியல் செயல்பாடுகளில் பெரும் தடையாக அமைந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள 8 மாதங்களே உள்ள நிலையில், ரஜினிகாந்தின் கட்சி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாதது, அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.


ரஜினிகாந்த்


ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் 50 விழுக்காடு மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகளை ரஜினிகாந்த் எப்பொழுது முடிப்பார் என்ற கேள்வியும் அவரை சுற்றி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வியூகம் எவ்வாறு இருக்கும் என ரவீந்தரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்,”யார் கூட்டணியை நம்பியும் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது. எம்ஜிஆரை போன்று சக்தி வாய்ந்தவர் என ரஜினி கூற வேண்டும். கட்சி அமைப்பை கட்டமைக்கும் செயலில் இறங்க தேவையில்லை. தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க இடம் தரக் கூடாது” என கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு முன்னதாக கட்சி தொடங்கி 2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட கமல்ஹாசன், கொரோனா ஊரடங்கு காலம் முழுவதும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். இதனால் வீட்டிற்குள்ளேயே பிக் பாஸ் நிகழ்ச்சி போல முடங்கி கிடப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
கமல்ஹாசன்


ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். அக்டோபரில் தொடங்வுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த 100 நாட்கள் நடைபெறும் என்பதால் 2021 ஆண்டின் துவக்கம் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரின் நாட்கள் ஓடி விடும்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தானே தயாரித்து நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்து அண்மையில் வெளியானது. புதிய திரைப்படம், பிக் பாஸ் என பிற பணிகளால், தீவிர அரசியலில் எவ்வாறு கவனம் செலுத்துவார் என்ற கேள்வியையும் எழுந்துள்ளது. எனினும் அவரின் அரசியல் நிலைப்பாட்டை விளக்கும் விதமாகவே திரைப்படம் அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...தங்க நகை வாங்கலாமா? வேண்டாமா? சந்தையில் என்ன நடக்கிறது


2021 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் கொரோனா ஊரடங்கு மற்றும் பணி சுமைகளும் மேலும் சவாலாகவே இருக்கும் என கூறுகின்றனர் அரசியல் அறிந்தவர்கள். ரஜினியும், கமலும் திரையுலகை தாண்டி அரசியலில் கொடிகட்டி பறக்கபோகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading