Home /News /entertainment /

விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்த கமல்…

விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்த கமல்…

உதவி இயக்குனர்களுடன் விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

உதவி இயக்குனர்களுடன் விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Vikram Movie : அடுத்து 2 வாரங்களுக்கு விக்ரம் படம் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

விக்ரம் படத்தில் உதவிய இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இந்த தகவலை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரை கமல் பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. 4 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 200 கோடி வசூலை விக்ரம் படம் உலகம் முழுவதும் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த 2 நடிகர்கள்… சுவாரசிய தகவல்

அடுத்து 2 வாரங்களுக்கு விக்ரம் படம் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது. மிகப்பெரும் படங்கள் போட்டிக்கு இல்லாததாலும், தரம் வாய்ந்த படைப்பாக விக்ரம் வெளிவந்திருப்பதாலும் இந்த படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகம் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். கமல் லோகேஷ்க்கு காரின் சாவியை அளிக்கும் புகைப்படம் வைரலானது.

இதையும் படிங்க - ’டான்’ முதலில் எனக்கு தான் வந்தது... அந்த காட்சிக்காக படத்தை தவிர்த்தேன்: உதயநிதி ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து விக்ரமில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு கமல்ஹாசன் Apache RTR 160 cc பைக்கை பரிசளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு சம்பவங்களால் கமலை ஜென்டில் மேன் என்றும், நன்றி மறக்காதவர் என்றும் அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். படத்தில் பணியாற்றிய இன்னும் சிலருக்கும் கமல் தரப்பில் இருந்து பரிசுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kamalhaasan, Vikram

அடுத்த செய்தி