Home /News /entertainment /

இது தான் நேர்மை! விக்ரம் வசூலை அறிவித்த உதயநிதியை மேடையில் பாராட்டிய கமல்

இது தான் நேர்மை! விக்ரம் வசூலை அறிவித்த உதயநிதியை மேடையில் பாராட்டிய கமல்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

விக்ரம் படம் வசூல் குறித்து மேடையில் பேசிய உதயநிதியை கமல்ஹாசன் மேடையில் பாராட்டினார்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து கமல் நன்றி கூறினார். அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்சியில் பேசிய கமல்ஹாசன் கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல், தான் வெளியிட்ட படம் விக்ரம் என தெரிவித்தார்.  அதற்கு ராஜ்கமல் நிறுவனத்தில் உள்ள மகேந்திரன் மற்றும் திரைப்படத்தின் வினியோகஸ்தர் உதயநிதி ஆகியோர்தான் காரணம் என கூறினார்.  தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடிவு எடுத்தபோது, பலர் எதற்கு இந்த முடிவு என கேட்டனர். ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே நான் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டேன். எந்த படம் என்று தெரியாமல் இருந்தது, அது தற்போது விக்ரமாக அமைந்து இருக்கிறது. அதை பார்த்து ஆக, நம் கமல் திரைப்படம் என மக்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தன் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் தன்னை தூக்கிப் பிடித்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.  என்னை விட அதிக திறமை கொண்ட கலைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.  அதை கண்முன் கண்டிருக்கிறேன் என தெரிவித்தார் கமல்.  விக்ரம் திரைப்படத்தை ஃபெஸ்டிவல் போல் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பெருமிதப்பட்டார்.

வீடியோ காலில் பேச, கவர்ச்சி படங்களை அனுப்பி வைக்க கட்டணம் வசூலிக்கும் விக்ரம் பட நடிகை

இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் அடுத்த திரைப்படத்திற்கு செல்கிறார். அந்த திரைப்படத்தின் ஏதேனும் பயம் அல்லது சந்தேகம் இருந்தால் என்னிடம் வாருங்கள்.  அவர் எடுக்கும் அடுத்த படத்தை போட்டி படமாக நான் பார்க்கவில்லை.  அவர் அந்த திரைப்படத்தை முடித்து விட்டு வரும்போது,  அதற்கடுத்து வரும் விக்ரம் எப்படி இருக்கும் பாருங்கள் என விகரம்-2 படத்திற்கு லீட் கொடுத்தார்.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசும் பொழுது, இவரின் தந்தை நமக்கு எதற்கு இந்த வேலை? நம் வேலையை பார்ப்போம் என கூறியதாக கேள்விபட்டேன். ஆனால் உதயநிதி ஸ்டாலின் இந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற நேர்மையாளர்கள் இருக்கும் பொழுது, பலர் பிழைப்பார்கள். இந்த நேர்மை முன்பே இருந்திருந்தால் தமிழ் சினிமா இந்தி சினிமாவை தாண்டி இருக்கும் என கூறினார். இதனால் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களைத் தொடர்ந்து விநியோகம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இறுதியாக திரையரங்க உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் மற்றும் மக்களுக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்குன் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்போதே 75 கோடி ஷேர் கொடுத்துள்ளது. விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இண்டர்வல் எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன். இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: Kamalhaasan, Udhayanidhi Stalin, Vikram

அடுத்த செய்தி