Home /News /entertainment /

ஒன்றியத்தின் தப்பாலே... கமலின் தர லோக்கலான ஆட்டத்தில் வெளியான விக்ரம் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்

ஒன்றியத்தின் தப்பாலே... கமலின் தர லோக்கலான ஆட்டத்தில் வெளியான விக்ரம் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

கமல் நடித்துள்ள விக்ரம் படத்திலிருந்து பத்தல பத்தலா என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

    லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப் ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. மே 15-ம்தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

    டாக்டரைத் தொடர்ந்து டான் படத்திலும் பிரியங்கா மோகன் இடம்பெற்றது எப்படி? – சிவகார்த்திகேயன் பதில்

    இந்தநிலையில் முதற்கட்டமாக கமலின் வரி மற்றும் குரலில் பத்தல, பத்தல என்ற என்ற முதல் பாடல் வெளியாளியுள்ளது. சென்னைத் தமிழில் இந்தப் பாடல் இருப்பது ரசிகர்களிடையே எளிதாக ரீச்சாகியுள்ளது. அனிருத்தின் தர லோக்கலான திரையரங்கில் காதை கிளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    கமல்ஹாசனும் வெகு நாள்களுக்குப் பிறகு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்லை இப்பாலே.... சாவி இப்போ திருடன் கையில்.. தில்லாலங்கடி.. தில்லாலங்கடி என்று அரசியல் நெடியிலும் பாடல் உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal Haasan, Vikram

    அடுத்த செய்தி