’மக்கள் நீதி மய்யம்’ பெயர்க் காரணம் என்ன...? மருதநாயகம் எப்போது உருவாகும்...? விஜய் சேதுபதி கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில்

”மருதநாயகத்திற்கு 40 வயது. ஒன்று வேறு ஒரு ஆள் நடிக்க வேண்டும். இல்லையேல் கதையை மாற்ற வேண்டும்”

’மக்கள் நீதி மய்யம்’ பெயர்க் காரணம் என்ன...? மருதநாயகம் எப்போது உருவாகும்...? விஜய் சேதுபதி கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில்
விஜய் சேதுபதி கேள்விக்கு கமல்ஹாசன் பதில்
  • Share this:
தலைவன் இருக்கிறான் டைட்டிலில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி கேட்க நடிகர் கமல் அதற்கு பதில் தெரிவித்தார்.

அதில் மக்கள் நீதி மய்யம் - பெயர்க் காரணம் என்ன என்று நடிகர் விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், மய்யம் எனும் சொல் என்னை மையம் கொண்ட சொல். புயலின் மையம் அமைதியான இடம் அது. புயலின் கண் என கூறுவார்கள் அங்கு புயலே இருக்காது. கிட்டதட்ட துறவு மாறி அது. மையத்தில் இருந்தால் சுட்டு கொன்று விடுவர்.

காந்தி ஒரு உதாரணம். எனக்கு அந்த வார்த்தை பிடித்த ஒன்று. ஆங்கிலத்தில் பார்த்தால் சென்டர் என கூறுவர். மக்கள் என்பது பரந்த சொல் உலகமே அது தான். கம்யூனிசம் என கூறும் போது கம்யூன் எனில் யாராக வேண்டுமானால் இருக்கலாம். மக்கள் கேட்டு வருவது நீதி ஒன்று தான் அதற்கு போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும். என தெரிவித்தார்.


மருதநாயகம் படம் குறித்து பதில் அளித்த நடிகர் கமல் பணம் இருந்தால் படம் உருவாகும் என்றும், அப்படியே உருவானாலும், மருதநாயகத்திற்கு 40 வயது. ஒன்று வேறு ஒரு ஆள் நடிக்க வேண்டும். இல்லையேல் கதையை மாற்ற வேண்டும் என கூறினார். மேலும், இளைஞர்களின் வளர்ப்பு குறித்து பேசிய அவர், அன்பும் அறிவும் அவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என கூறினார்.

 


First published: May 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading