ஹேராம் படத்தில் பேசிய அச்சங்கள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன - கமல்ஹாசன் வருத்தம்

ஹேராம் படத்தில் பேசிய அச்சங்கள் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன - கமல்ஹாசன் வருத்தம்
கமல்ஹாசன்
  • Share this:
ஹேராம் படத்தில் பேசிய எச்சரிக்கையும், அச்சங்களும் உண்மையாகிக் கொண்டிருப்பது வருத்தமானது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தன் ஒப்பற்ற நடிப்பால் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில், நடிப்பைத் தாண்டி கதாசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மட்டுமில்லாமல் இயக்குநராகவும் சாதிக்க முடியும் என, 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹே ராம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியப் பிரிவினையின் ரத்த வரலாற்றை சாகேத் ராம் எனும் பிராமண தமிழரின் பின்னணியில் ஹே ராம் காட்சிப்படுத்தியது.

எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை குழப்பமில்லாத திரைக்கதையில் கொண்டுவந்ததன் மூலம் ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் கமல் தன்னை நிரூபித்திருப்பார்.


ஹே ராம் படம் இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடிப்பது போல் அமைந்திருப்பதாக சிலர் குற்றம் சாட்டினாலும் இந்தியப் பிரிவிணையை ஹே ராம் போல எந்த படமும் காட்சிப்படுத்தியதில்லை என்பதால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஹேராம் படத்தை தலைநிமிர்ந்து பார்க்கிறது.

வெளியான காலகட்டத்தில் யாருக்கும் புரியாமல் தோல்வியைத் தழுவிய ஹேராம் திரைப்படம், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு இந்த படத்தில் கையாளப்பட்டுள்ள நுட்பங்களாலேயே சினிமா பாடமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசையும் 20 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

அண்மையில் காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாடப்பட்ட போது மீண்டும் மறு திரையிடலுக்குட்படுத்தப்பட்ட ஹேராம் திரைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. கமல்ஹாசன் தனது அரசியல் நிலைப்பாட்டை 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படத்தின் மூலம் அறிவித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆண்டுகள் பல உருண்டோடினாலும் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இன்றும் ஹேராம் கொண்டாடப்படுகிறது என்பதற்கு ரசிகர்கள் அதன் 20-வது ஆண்டிலும் காட்டும் ஆரவாரமே சாட்சி.இந்நிலையில் படத்தில் பணியாற்றிய ஷாரூக்கான் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் கமல்ஹாசன், “இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அப்போதே நாம் இந்தப் படத்தை எடுத்தது மகிழ்ச்சி. அந்தப் படம் பேசிய எச்சரிக்கையும், அச்சங்களும் உண்மையாகிக் கொண்டிருப்பது வருத்தமானது. நாட்டின் நல்லிணக்கத்துக்கு எழுந்த சவால்களிலிருந்து நாம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். நாம் செய்வோம். நாளை நமதே” என்று கூறியுள்ளார்.கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளானதை இணையதளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: எனது பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading