முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்பு படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிம்பு படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிம்பு

சிம்பு

சிம்பு தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

சிம்பு நடிக்கவுள்ள படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து கமல் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகிறார். அடுத்ததாக கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் மிக குறுகிய காலத்தில் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால், இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

லைக்ஸை அள்ளும் விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட பாடல்…

இந்தியன் 2 படத்திற்கு தயாராகும் வகையில் கமல் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்நிலையில், கமலின் சினிமா தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பேனரில் சிம்பு படம் ஒன்றில் நடிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

சிம்பு நடிப்பது உறுதி என்றும், இயக்குனர் யார் என்பது இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா விளக்கம்

சிம்பு தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பத்து தல படத்தை தொடர்ந்து ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிம்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மீண்டும் இன்னொரு படம் உருவாகவுள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

First published:

Tags: Simbu