விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக வரிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தமிழில் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய கமல்ஹாசன், நான்கு வருடங்களாக தனது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்றும், 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்றும் கமல் ஹாசன் தெரிவித்தார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்பிறகு விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே” என்ற பாடல் வரி சர்ச்சையானது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த கமல், தமிழில் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் இருப்பதாகக் கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.