Home /News /entertainment /

கமலின் விக்ரம் - சுவாரசியமான அப்டேட்...!

கமலின் விக்ரம் - சுவாரசியமான அப்டேட்...!

விக்ரம்

விக்ரம்

Kamal Haasan: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி இருவரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
கமல் தயாரித்து நடித்து வரும் விக்ரம் படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்தியன் இரண்டாம் பாகம் ஷங்கருக்கும் லைகாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியில் நிற்க, கமல் விக்ரம் படத்தை தொடங்கினார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி இருவரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக சென்னையில் நடந்து வந்தது. நடுவில் கொரோனா பாதிப்பால் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிறிய தடங்கல் ஏற்பட்டது. அவுட்டோரில் எடுப்பதாக இருந்த கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை பின்னி மில்லுக்கு மாற்றினர்.

விக்ரமில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லன். பகத் பாசிலுக்கு முக்கியமான வேடம். ஆனால் இதுவரை அவரது கதாபாத்திரம் குறித்து எதுவும் தெரியவில்லை. இவர்களுடன் செம்பன் வினோத், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு க்ரிஷ் கங்காதரன்.

Also read... தனுஷ் பட க்ளிம்ப்ஸில் தனுஷ் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி!
விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது கமல் கலந்து கொண்டுள்ளார். இந்த ஷெட்யூல்டுடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடும் வேகத்தில் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த வருட கோடையில் விக்ரம் திரைக்கு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi, Kamal Haasan, Lokesh Kanagaraj

அடுத்த செய்தி