முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வசூலில் புதிய சாதனை படைத்த கமல் ஹாசனின் விக்ரம் படம்!

வசூலில் புதிய சாதனை படைத்த கமல் ஹாசனின் விக்ரம் படம்!

விக்ரம்

விக்ரம்

தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயகத்தில் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலகளவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில்  விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சனை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

Also read... சிவாஜி ரசிகர்கள் வியப்பு, வாத்தியார் ரசிகர்கள் கொதிப்பு - அன்றே தொடங்கிய வசூல் போட்டி

அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj