கமலின் விக்ரம் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி அளித்து ட்விட்டர் சிறப்பு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் 1986ல் வெளிவந்து சாதனை படைத்தது. அதே டைட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார்.
Also read... தனுஷின் தி க்ரே மேன் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி அளித்த ட்விட்டர்
மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததாலும் விக்ரம் படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விக்ரம் படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் முன்பதிவு சென்னை உள்பட தமிழ்நாட்டில் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Our labour of love . Now you emote . #Vikram #VikramInAction #VikramHitlist
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2022
முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் விக்ரம் திரைப்படத்தின் ஸ்பெஷல் எமோஜி வெளியானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.