ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூலில் அஜித், விஜய் படங்களை பின்னுக்கு தள்ளிய கமல் ஹாசனின் விக்ரம் படம்

வசூலில் அஜித், விஜய் படங்களை பின்னுக்கு தள்ளிய கமல் ஹாசனின் விக்ரம் படம்

விக்ரம்

விக்ரம்

தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உலகளவில் அஜித்தின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட்டை ஒரே வாரத்தில் பின்னுக்கு தள்ளி கமல் ஹாசனின் விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

  கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில்  விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட். தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.

  இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் கலெக்சன் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

  அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 230 கோடிக்கும் அதிகமாக ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பீஸ்ட், வலிமை படங்களின் மொத்த வசூலையும் விக்ரம் பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

  Also read... திருமணம் முடிந்த கையுடன் திருப்பதிக்கு செல்லும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!

  அடுத்த சில வாரங்களுக்கும் விக்ரம் படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Box office, Entertainment, Kamal hassan