• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kamal Haasan: தேர்தலுக்கு முன்பே சாதனை படைத்த கமல்!

Kamal Haasan: தேர்தலுக்கு முன்பே சாதனை படைத்த கமல்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல் குறிப்பிடும் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்ற வார்த்தை இணையத்தில் ட்ரெண்டானது.

  • Share this:
    நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ பட டீசர் தற்போது 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

    மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இதில் ஹீரோவாக நடிகர் கமல் ஹாசன் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படம் கமலின் 232-வது திரைப்படமாக உருவாகிறது.அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    Vijay Sethupathi: சம வயது நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

    கடந்த இரண்டு மாதங்களாக விக்ரம் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக சமீபத்திய நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார் லோகேஷ். முன்னதாக விக்ரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் கமல் குறிப்பிடும் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்ற வார்த்தை இணையத்தில் ட்ரெண்டானது.



    இந்நிலையில் விக்ரம் படத்தின் டீசர் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதோடு விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    1986-ம் ஆண்டு கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. இதில் சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: