ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vikram : வெளியானது விக்ரம்..! கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டம்

Vikram : வெளியானது விக்ரம்..! கமல் ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டம்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

Vikram : நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் திரைப்படம் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

    க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. விக்ரம் படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

    நீண்ட நாள்களுக்கு பிறகு கமல் ஹாசனை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் திரைப்படம் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு விக்ரம் திரைப்பட சிறப்பு காட்சிக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Arjun Doss, Cinema, Kamal Haasan, Lokesh Kanagaraj, Movie, Movie review, Vikram