ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு!

விக்ரம்

விக்ரம்

உற்சாகத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார், சூர்யாவுக்கு 40 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச், துணை இயக்குநர்களுக்கு பைக் ஆகியவற்றை பரிசளித்தார் கமல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார் கமல்.

படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல் ஹாசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

அந்த உற்சாகத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார், சூர்யாவுக்கு 40 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச், துணை இயக்குநர்களுக்கு பைக் ஆகியவற்றை பரிசளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும், பேக் ரவுண்ட் மியூஸிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நிலையில் விக்ரம் படத்தின் OST (Original Background Track)-யைக் கேட்க ஆர்வத்துடன் இருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது படத்தின் OST வெளியிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Anirudh, Kamal Haasan, Lokesh Kanagaraj