Home /News /entertainment /

Once Upon a Time : லைக்ஸை அள்ளும் விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸ் வீடியோ பாடல்…

Once Upon a Time : லைக்ஸை அள்ளும் விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸ் வீடியோ பாடல்…

விக்ரம் க்ளைமேக்ஸ் காட்சியில் கமல்.

விக்ரம் க்ளைமேக்ஸ் காட்சியில் கமல்.

Vikram படத்தின் கிளைமாக்சில் இடம்பெறும், ஒன்ஸ் அபான் எ டைம் (Once Upon a Time) என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

    விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் வீடியோ பாடல் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்த பாடலை பாராட்டி ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

    கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா இடம்பெற்றிருந்தார்.

    மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரிலீசுக்கு முன்பே அதிகம் காணப்பட்டது. இதனை நிறைவு செய்யும் வகையில் படம் அமைந்ததால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.

    படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும், ரசிகர்களின் விருப்பத்தை பெற்றன. விக்ரம் கேரக்டரில் கமலும், சந்தனம் கேரக்டரில் விஜய் சேதுபதியும், அமர் என்ற கதாபாத்திரத்தில் பகத் பாசிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

    குடும்பத்துடன் இலை சாப்பாடு... தனுஷ்-செல்வராகவனுடன் வித்யுலேகா வெளியிட்ட படங்கள்!

    கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா இதுவரை இல்லாத வில்லத்தனத்தை காட்டியிருந்தார். அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

    எடிட்டிங், ஒளிப்பதிவு, கலை உள்பட அனைத்து டிபார்ட்மெண்ட்களும் தங்களது வேலையை சிறப்பாக செய்ததால், விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று ரூபாய் 450 கோடிக்கு மேலாக வசூலித்தது.

    இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு வீடியோ பாடலாக வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிளைமாக்சில் இடம்பெறும், ஒன்ஸ் அபான் எ டைம் (Once Upon a Time) என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம் பெற்றிருக்கும், எதிரிகளை மெஷின் துப்பாக்கியால், கமல் பந்தாடும் காட்சி அதிக விருப்பத்தை பெற்றது.



    இந்த பாடலுக்காகத்தான் காத்திருந்ததாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக பத்தல பத்தல, போர் கண்ட சிங்கம் ஆகிய பாடல்கள் வெளிவந்தன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய விக்ரம் திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamal Haasan, Vikram

    அடுத்த செய்தி