36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் செய்த வசூல் சாதனை பற்றி தெரியுமா?
கடந்த 1986-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இதனை இயக்குநர் ராஜசேகர் இயக்கியிருந்தார். படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மூலம் கமல்ஹாசனும் அவரது அண்ணன் சாரு ஹாசனும் தயாரித்திருந்தனர்.
இதில் கமல் ஹாசனுடன் இணைந்து சத்யராஜ், லிசி, அம்பிகா, டிம்பிள் கபாடியா, ஜனகராஜ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், ரூ.8 கோடி வசூலித்ததோடு 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
36 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இது முந்தைய விக்ரம் படத்தின் தொடர்ச்சி இல்லையென்றாலும், அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சி எனக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
நடிகை சமந்தா கர்ப்பமா? கவனம் பெறும் புகைப்படம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பால், விக்ரம் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் படக்குழுவினர் தவித்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் ஹாசன், விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
தற்போது இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.