தளபதி விஜய் கால்ஷீட் தந்தால் அவருடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக விக்ரம் படப்பிடிப்பு தடை பட்டது. அதன் பிறகு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, இதனாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
பின்னர் வெளியூரில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பால், விக்ரம் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் படக்குழுவினர் தவித்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் ஹாசன், விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவளை ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும்... ஸ்ரீநிதியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்ஷத்ரா
தற்போது இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், வரும் ஜூன் 3-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து விக்ரம் படத்தின் புரொமோஷன் வேலைகள் படு பிஸியாக நடந்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், உலகநாயகன் அவர்களை தளபதியோட எப்போது பார்க்கலாம் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், தளபதி அய்யாவோட கால்ஷீட் கிடைச்சா, நிச்சயம் நடிப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.