ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தமிழ்நாடு வாழ்க' - ஆளுநரின் கருத்துக்கு 6 மொழிகளில் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்!

'தமிழ்நாடு வாழ்க' - ஆளுநரின் கருத்துக்கு 6 மொழிகளில் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இதை மாற்ற சொல்வதற்கு அவர் யார்? அவர் பெயர் ரவி என்பதை புவி என மாற்றிக்கொள்வாரா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, ''தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்கிறது.

தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று பேசினார். ஆளுநரின் பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுவருகின்றனர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

இதன் ஒரு பகுதியாக ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழ்நாடு வாழ்க என தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் தன்னுடன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளை நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய கமல், ''பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதன் காரணமாகவே நாம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்றோம். நாம் மதத்திற்கு எதிரான அரசியலை தடுக்க வேண்டும். ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் பாரத் ஜோடோ அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நான் ஏ சொன்னால் ஏ சொல்லுங்கள், பி சொன்னால் பி சொல்லுங்கள். உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன். எனவே தலைமையின் கட்டளைகளை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்று பெயர் வந்துள்ளது. இதை மாற்ற சொல்வதற்கு அவர் யார்? அவர் பெயர் ரவி என்பதை புவி என மாற்றிக்கொள்வாரா என்று பேசினார்.

First published:

Tags: Kamal Haasan, RN Ravi, Tamilnadu