Home /News /entertainment /

Vikram: நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படத்தின் FDFS-ல் கமல் ஹாசன்!

Vikram: நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படத்தின் FDFS-ல் கமல் ஹாசன்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் FDFS ஷோ-வை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் கமல் ஹாசன் தனது விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் பார்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கலுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாவதால், 10 நாட்களாக இந்தியா முழுவதும் புரொமோஷனில் ஈடுபட்டுள்ளார் கமல்.

    இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை, ரோகினி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல்ஹாசன் பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் FDFS ஷோ-வை பார்ப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் தங்கள் படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்க்க வெளியே வருவதில்லை, ஆக கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பது கோலிவுட்டின் ஹாட் நியூஸாக வலம் வருகிறது.

    பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கமல்ஹாசன் நான்காண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. அவர் நடிப்பில் கடைசியாக 2019-ல் ‘விஸ்வரூபம் 2’ வெளியானது. ஆனால் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருந்தார். ‘விக்ரம்’ படத்தில் சந்தான பாரதி, ஷிவானி, மைனா நந்தினி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Vikram

    அடுத்த செய்தி