Home /News /entertainment /

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமலின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமலின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் அடிப்படைக் கதை இறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் வேலைகள் நடந்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த ‘வெந்து தணிந்தது காடு’ ஆடியோ வெளியீட்டு விழாவில், தானும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து பணியாற்றிய வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் தொடர்ச்சியில் பணியாற்ற இருப்பதாகக் கூறினார்.

    கமல்ஹாசன் மற்றும் ஜோதிகா நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் டிசிபி ராகவன் வேடத்தில் கமல் நடித்தார். இப்படம் போலீஸ் கிளாசிக் படங்களில் ஒன்றாகும். இதற்கிடையே கௌதம் மேனனுடன் இணைந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் அடிப்படைக் கதை இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    நேர்காணலில் பேசிய ஜெயமோகன், படத்தின் ஒன் லைனர் குறித்து இயக்குனரிடம் விவாதித்ததாகவும், அதை மேலும் மேம்படுத்தும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறினார். படத்தில் டிசிபி ராகவனின் வாழ்க்கையை மனதில் வைத்து, அவர் இப்போது ஓய்வு பெற்றவராக இருப்பார் என்றும், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவதிலிருந்து கதை தொடங்கும் என்றும் கூறினார்.

    ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும்... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எழுத்தாளரின் இந்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan

    அடுத்த செய்தி